எண்ணற்ற வெற்றிகளைக் குவிக்கும் இளம் வீராங்கனை !
13 January 2025
G. MONYA RAO.
(Black Belt - 2nd Dan in karate
and Brown Belt in Kobudo Weapon) Chennai.
சென்னையில் வழக்கறிஞராக பணிபுரியும் கோகுலராவ் - சுஜாதா இவர்களின் மகளான மோன்யா ராவ் இளமையிலேயே பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று சாதனை மாணவியாக வலம் வருகிறார்.
குறிப்பாக கராத்தே போட்டி மற்றும் பேச்சுப்போட்டி இவைகளில் கலந்துகொண்டு தொடர்ந்து முதலிடத்தில் வெற்றி பெற்று வருகிறார் . மேலும் கட்டுரை எழுதுதல் , சுவரொட்டி தயாரித்தல் , வினாடி வினாவில் பங்கேற்றல் , கவிதைப் போட்டி இவற்றிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார் .
இந்த மாணவி இதுவரை தங்கப்பதக்கங்கள் , வெள்ளிப்பதக்கங்கள் வெண்கலப்பதக்கங்கள் என 200 -க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்று சரித்திரம் படைத்து வருகிறார் என்றால் அது மிகையல்ல!
சிங்கப்பெண் விருது, வீரமங்கை விருது , சிறந்த பேச்சாளர் விருது, யோகா சாம்பியன்ஷிப் விருது, மார்ஷல் பிராடிஜி விருது , திறமைகளின் திருமகள் விருது , சிறந்த கராத்தே மாணவி -2024 என எண்ணற்ற போட்டிகளில் கலந்துகொண்டு ஆளுநர், தமிழக அமைச்சர்கள் மற்றும் பல வல்லுநர்களின் கரங்களால் எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார்.
மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவிலான பல்துறை போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று கோப்பைகளை வாங்கிக் குவித்துள்ள மோன்யா ராவ் தமிழ் , ஆங்கிலம் , தெலுங்கு , ஹிந்தி என நான்கு மொழிகளில் பேசுகிறார் . இந்தி பிரச்சாரத் தேர்வுகளில் பிரவீன் பூர்வாத் வரை இந்தித்தேர்வில் தேர்வு எழுதி முதல் வகுப்பில் வெற்றி பெற்றிருக்கிறார் .
இவ்வளவு பெருமைக்குரிய சாதனை மாணவியான மோன்யா ராவ் விடம் நாம் கேட்டபோது அவர் தன்னைப் பற்றி கூறியதாவது :
எனது தொடர்ச்சியான வெற்றிப் படிகளுக்கு காரணம் முதலில் இந்த உலகை படைத்த இறைவன் மற்றும் என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் ஒத்துழைப்புத் தரும் எனது பெற்றோர்கள் , முக்கியமாக இன்று வரை என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் எனது தாத்தா, பாட்டி , கற்பித்து வரும் ஆசிரியர்கள் தான் என்று கூறுகிறார்.
மேடையில் பேச வேண்டும் என்றாலே. அதற்கு முதலில் தன்னம்பிக்கை வேண் டும். நான் முதல் முதலாக மேடையில் ஏறி பேச ஆரம்பித்த போது எனக்கு 7 வயசு. அப்போது என் முன் சுமார் 50 பேர் இருந்தார்கள். ஆனால் நான் கூட்டத்தை எல்லாம் பார்த்து அஞ்சாமல் தைரிய மாக பேசினேன். அது எனக்கு தன்னம்பிக் கையை கொடுக்க, அதனைத் தொடர்ந்து பல்வேறு பேச்சுப் போட்டிகளில் பங்கேற் றேன். வெற்றியும் பெற்றேன். ஒரு சில போட்டிகளில் தோல்வியும் அடைந்திருந் தாலும், அதைக்கண்டு துவண்டு விடாமல், அடுத்தடுத்த போட்டியில் பங்கு பெற ஆரம்பித்தேன். எப்போதும். எதை யும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை யுடன் அணுகுவது மட்டுமே எனக்குப் பிடித்தமானது என்கிறார்.
மேலும் இவரது லட்சியங்கள் என்னவெனில் ... சர்வதேச அளவில் நடக்கும் கராத்தே மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளை பெற வேண்டும் . அதன் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான். இந்த நோக்கங்களுக்காக நான் தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறேன். நிச்சயம் சாதிப்பேன் . தன்னம்பிக்கை + விடாமுயற்சி = வெற்றிப்படிகள் இதுவே எனது பாதை என்கிறார்.
மேலும் இளம் தலைமுறையினருக்கு இந்த உலகில் நிறைய கவனச்சிதறல்கள் உள்ளன, எனவே இந்த கவனச்சிதறல்களிலிருந்து விடுபட நீங்கள் அனைவரும் உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும், உடல் பயிற்சி, தற்காப்பு கலை மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கும் மனதிற்கும் நல்லது . தயவு செய்து இந்த உலகில் ஆபத்தான போதை மருந்துகளுக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள் இளைஞர்களான நாம் அனைவரும் சாதிப்பதற்காகவே பிறந்துள்ளோம் என்பதை உணர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி விட வேண்டும் என்று பேசி முடித்தார் மோன்யா ராவ்.
இந்த பூமியில் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வீர மங்கைகள் பிறக்கத்தான் செய்கிறார்கள் அந்த வரிசையில் மோன்யா ராவ் பல சாதனைகள் நிகழ்த்திட எங்கள் கொற்றவை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து விடை பெற்றோம்.
இன்றைய சமூகத்தில் வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கு இவர் ஒரு ரோல் மாடல் என்றே கூறலாம் .
பேட்டி : சுப்பிரமணியன் செய்தியாளர் சிவகங்கை.