வணக்கம் ,
கொற்றவை அவார்ட்ஸ் என்பது கொற்றவை மாத இதழ் மற்றும் வெற்றி அறக்கட்டளையின் ஓர் அங்கமாகும்.
ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களையும் சாதிக்க நினைப்பவர்களையும் அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் கொற்றவை அவார்ட்ஸ்.
கொற்றவை விருது விழாவிற்கு தாங்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்கள் சார்ந்த தகவல்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும் . அதில் ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் தங்களுடைய பெயரை அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும் கொற்றவை விருது பெற்றபின் தங்களுடைய செயல்பாடுகளில் தவறு ஏதேனும் இருப்பினும் எங்களுடைய கொற்றவை விருதுகள் திரும்ப பெறப்படும் . திரும்ப பெறப்பட்ட
விருதுகள் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகத்திலும் உங்கள் புகைப்படத்துடன் வெளியிடப்படும் .
கொற்றவை விருது விழாவில் சிறப்பு விருந்தினர்களை அழைப்பதும் அல்லது எங்களுடைய குழுமம் சார்பாக விருது வழங்குவதும் எங்களுடைய தனிப்பட்ட விருப்பம் .
நாங்கள் அலைக்கும் சிறப்பு விருந்தினர்கள் விருது விழாவில் வர முடியாவிட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை கொற்றவை சார்பில் ஏற்படுத்தப்படும் அல்லது கொற்றவை விருது மாற்றி அமைக்கப்பட்டாலும் அது எங்களின் தனியுரிமை கொள்கை ஆகும்.
கொற்றவை விருது விழாவில் தாங்கள் கலந்து கொள்ளாத பட்சத்தில் தங்களுக்கான விருது கொரியரில் அல்லது இ சர்டிபிகேட் ஆக வழங்கப்படும்.
விருது விழாவில் தாங்கள் தாமதமாக வந்து விருது பெற முடியவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
கொற்றவை விருதுகளின் நோக்கம் உங்களின் தனித்தன்மையே வெளிக்கொண்டு வருவதற்கும் உங்களுடைய சேவை மென்மேலும் உயர்வதற்கும் , தாங்கள் செய்த சாதனைகளை நாங்கள் மனதார வாழ்த்துவதே எங்களின் பிரதான நோக்கம் ஆகும்.
கொற்றவை விருதுகள் மக்கள் பணிக்கான Vetri Trust மற்றும் Kotravai News - ஆல் நடத்தப்படுவதால் தாங்கள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் , திரும்ப தரப்பட மாட்டாது.
எங்களின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கொற்றவை விருது விழாவில் தாங்கள் பங்கேற்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!!!